யுகம்

புராணங்களிலும் இதிகாசங்களிலும் யுகங்களை பற்றி விவரங்கள்  பல இடத்தில் தோன்றுகின்றன.

நான்கு வகை யுகங்கள் இருக்கின்றன. அவைகள்  கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், மற்றும் கலியுகம் ஆகும். இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர் யுகம் என்று கூறுவர். நம்முடைய சாஸ்திரங்களில் ஒரு சதுர்யுகம் என்பது தேவர்களுக்கு ஒரு ஆண்டாக கூறுப்படுகிறது.

கீதையில் எட்டாம் பகுதியில் உள்ள 17ஆம் ஸ்லோகம் பின்வருமாறு கூறுகின்றன.

 

பிரம்மாவிற்கு ஆயிரம் சதுர்யுகம் ஒரு பகலாகும், ஆயிரம் சதுர்யுகம் ஒரு இரவாகும்(8.17). ஆக இரண்டாயிரம் சதுர்யுகம் சேர்ந்து பிரம்மாவிற்கு ஒரு நாளாக சொல்லபடுகிறது.

 

       அதாவது பிரம்மனின் பகல் முடிந்தவுடன் தேவர்களின் ஆயுளும் முடிந்து விடுகிறது. மேலும் கண்ணன் சொல்கிறான் பிரம்மன் முதற்கொண்டு அனைவருக்கும் மறுபிறவி உண்டு என. பிரம்மனின் ஆயுள் முடிந்தவுடன் அனைத்து உயிருள்ள, மற்றும் உயிரறற்ற ஜட பொருள்கள் எல்லாம் சூட்சம (அதாவது உருவமற்ற) தன்மையை அடைந்து என்னுள் லயமாகிவிடும், பிறகு நான் பகல் பொழுது வரும்பொழுது மீண்டும் ஸ்ரிஸ்டியை தொடங்குவேன்.

 

       மேலும் மகாபாரதத்தின் படி பிரம்மனின் ஆயுள் கிட்டத்தட்ட நானுற்றி முப்பத்துஎட்டு கோடி வருடங்கள், அதன் பிறகு பூமி உட்பட அனைத்தும் நாராயணனின் வயிற்றுக்குள் சென்று விடும். ஆகவே அதுவரை பூமி இருக்கும், பல்லாயிரம் சதுர்யுகங்கள் மாறி மாறி வந்து கொண்டேஇருக்கும்.

 

கிருதயுகம் = 17,28,000 வருடங்கள் (4 * கலியுகம்  )

திரேதாயுகம் = 12,96,600 வருடங்கள் (3 * கலியுகம்  )

துவாபரயுகம் = 8,64,000 வருடங்கள் (2 * கலியுகம்  )

கலியுகம் = 4,32,000 வருடங்கள்

 

1 சதுர்யுகம் = 43,20,000 வருடங்கள்

 

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள கால வித்யாசங்கள் :

ஒரு மானிட  வருஷம் தேவர்களுக்கு ஒருநாள் (அஹோராத்ரம்) ;

300 வருஷம் = 1 தேவ வருஷம்;

4800 தேவ வருஷம் = க்ருத யுகம்;

3600 தேவ வருஷம் = த்ரேதாயுகம்;

2400 தேவ.வருஷம் = துவாபரயுகம்;

1200 தேவ.வருஷம் = கலியுகம்;

 

மன்வந்திரம் :

ப்ரம்மாவின் ஒரு வாழ் நாளை  "கல்பம்"  என்று அழைப்பர். ஒவ்வொரு கல்ப காலம் முடிந்ததும் உலகம் அழிந்துவிடுகிறது.. அதைச் சிறிய ப்ரளயம் என்று கூறுவர். ப்ரம்மாவின் ஆயுட்காலம் 120 வருடங்கள்  ஆகும் . ஆக ஒவ்வொரு ப்ரம்மாவின் காலத்திலும் 42,200 ப்ரளயங்கள் (120X360).உருவாகின்றன.

ஒரு  கல்பம் 14 மந்வந்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு  மனு உண்டு. அந்த மனுவின் வாழ்நாள் ஒரு "மன்வந்திரம்". என்று அழைக்கப்படுகிறது.

ஒரு மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன.

 

14 மன்வந்திரங்கள் :

 

1) ஸ்வாயம்பு;

2) ஸ்வரோசிச;

3) உத்தம;

4) தாமஸ;

5) ரைவத;

6) சக்ஷூச;

7) வைவஸ்வத;

8) ஸாவர்ணி;

9) தக்ஷ ஸாவ்ர்ணி;

10) ப்ரம்ம ஸாவர்ணி;

11) தர்ம ஸாவர்ணி;

12) ருத்ர ஸாவர்ணி;

13) ரௌச்ய ஸாவர்ணி;

14) இந்திர ஸாவர்ணி.

 

நாம் இருக்கும் மன்வந்திரம் "வைவஸ்வத மன்வந்திரம்" (7அம் மன்வந்திரம்). வைவஸ்வதன்  - சூர்யனின் மகன். இவனே நமது மனு. ஸத்யவ்ருத மனுவே போன ப்ரளயத்திலிருந்து விஷ்ணுவால்( மத்ஸ்யாவதாரம்) காப்பாற்றப்பட்டு. வைவஸ்வத மனுவானார்.இவனே சூர்ய வம்சத்தின் முதல் அரசன். த்ரேதாயுகத்தில் சூர்யன் இம்மனுவிற்கு "ஸாத்வத தர்மம்" போதித்தான். இவன் அதை இக்ஷவாஹுவிற்கு உபதேசித்தான்